உள் அறையில் தாழிடப்பட்ட இரக்கம்
சாவி துளை வழி தேடுகிறது
பிரிவின் வேதனைக்குள்
உருக்கி ஊற்றப்பட்ட உன்னை
குருவீச்சம் பூ நிறைந்த
மன வெளிக்குள்
அத்து மீறி நுழைகிறது
உன் காற்று
இறுதி வசந்தங்களையும்
உதிர்த்திவிட
அடையாளம் அறியா உன் பசியில்
நான் அணு அணுவாக
அருந்தப்பட்டேன்
காலியான மாம்ச குவனளையில்
நிரம்பி வழிகிறது
உன் கோபத்தின் உச்சம்
பறந்து திரிய ஆசைதான்
உன் மன வெளியில் ஊர் குருவி என
கன்னி குத்தி வைத்திருக்கிறாய்
இரை தேட இறங்குவேன் என்று உன்
பாழ் நிலங்களில்
காதலாகி கசிந்து உருகி
உன் விரல்களுக்குள் அகப்பட்ட
கைப் பாவை ஆனேன்
உருட்டி விளையாடு
உடைத்து விடாதே
இரை கொத்தி இறக்கும் மீன்
குஞ்சாய்
இறக்க வேண்டியே
வருகிறேன் உன் வழியில்..
-ஸமான்-
SK.ZaMan kavithai
Monday, 21 January 2013
*இறை கொத்தி இறக்கும் மீன் குஞ்சி*
Subscribe to:
Posts (Atom)